பாகம் 10
சாப்பாடு கொண்டு வந்திருந்த டப்பாவை திறந்தாள் நிலா, அதில் சக்கரை பொங்கல், கொஞ்சம் வடை கொஞ்சம் தயிர் சாதம் இருந்தது, வீட்டில் என்ன விசேஷம் என்று கேட்டாள் நிலா, கவி இருந்த மனநிலையில் அவன் சாப்பிடவில்லை அதனால் அதில் என்ன இருந்தது என்றே கவிக்கு தெரியாது, இரு நிலா அண்ணிகிட்ட கேக்கறேன் என்று போன் போட்டான், அச்சோ மறந்துட்டேன் அண்ணி மண்ணிசுருங்க, கல்யாண நாள் நல்வாழத்துக்கள் என்று சொல்லிவிட்டு போன் வைத்து விட்டான். மறந்துட்டேன் நிலா இன்னைக்கு அண்ணா அண்ணி கல்யாண நாள். ஏண்டா நானும் பேசிருப்பென்ல ஏன் நீ போன் வெச்சுட்டன்னு கேட்டுட்டு அவளே நான் சாயந்திரம் அண்ணிய போய் பாதுக்கரெண்ணு சொல்லிட்டு நீ தான் கூட்டிட்டு போனும் என்று சகாஜமாக பேச ஆரம்பித்து விட்டாள். சாப்பிட ஆரம்பித்தாள். கவி நீ என் சாப்டல அண்ணி உனக்கும் சேத்து தான் குடுத்ருக்கங்க வா வந்து சாப்பிடு என்று அவனையும் சாப்பிட வைத்தாள்.
கவிக்கு மிகவும் சநதோஷமாக இருந்தது. அன்று என்னவோ எப்பொழுதும் விட வேலை அதிகமாக இருந்தது. அவளால் கொஞ்சம் கூட ஓய்வெடுக்க முடியவில்லை. மணி 8 ஆகிருந்தது, நிலா நீ இன்னும் கிளம்பல கேட்டுக்கொண்டே கவி வந்தான், பின்னாடியே அவளது மேலாளர் அழைப்பதாக அலுவலக பணியாள் வந்து கூறினான். இரு கவி போய் என்னன்னு கேட்டுட்டு வரென் ரெண்டு பேரும் உன் வீட்டுக்கு போய்ட்டு அண்ணிக்கு வாழ்து சொல்லிட்டு நான் என் வீட்டுக்கு கிளம்பி போய் விடுவேன்னு சொல்லிட்டு உள்ள போய்ட்டா. கவி அவள் சென்ற திசையையே பார்த்துக்கொண்டு இருந்தான். என்ன ஒரு அழகு, யாரா இருந்தாலும் ஒரு தடவைக்கு இன்னொரு தடவ பாக்க வெக்கர அழகு, அவளுடைய துடுக்கு தனம் அவளுடைய அழகிற்கு இன்னும் மெருகேற்றியது. அவளை முதன்முதலில் பார்த்த மஞ்சள் நிற சுடிதார் இன்னும் என் நினைவிலிருந்து அழியவில்லை, அவளை அப்போதிலிருந்தே காதலிக்க ஆரம்பித்து விட்டோமோ என்று அவனுக்கு அவனே ஏதேதோ நினைத்துக்கொண்டு அவளுக்காக காத்திருந்தான். காதலிக்காக நண்பர்களுக்காகன்னு இல்ல மனதுக்கு பிடித்தவர்களுக்கு காக காத்திருத்தல் என்றும் சுகமே. ஒரு அரைமணி நேரம் கழித்து நிலா உள்ளிருந்து வெளியே வந்தாள், கவி கிளம்பிருக்க கூடும் என்று நினைத்துகொண்டு வந்தவளுக்கு கவி இருந்தது ஒரு நிம்மதியை கோர்த்திருந்தது. அவளுக்கு கவியுடன் இருப்பது எப்போதுமே பிடித்த ஒன்றுதான். அதுக்காக அவள் காதிலிக்கறா என்றெல்லாம் நினைச்சுக்காதீங்க. அம்மணிக்கு காதலுக்கும் ரொம்ப தூரம். இது ஒரு பாசம் அன்புன்னு சொல்லிக்கலாம்.
என்னாச்சு நிலா இவ்ளோ நேரம், பிளேட் போட்டுட்டாரா என்று கேட்டான். நிலாவிற்கு உள்ளே நடந்த உரையாடலை சொல்ல இது சரியான நேரம் என்று தோன்ற வில்லை. அதனால் ஒண்ணுமில்லடா எப்பவும் போலதான் என்றுவிட்டு, கவி கண்ணா இன்னைக்கு உங்க வீட்டுக்கு போக முடியாதுடா, நாளைக்கு காலம்பற சீக்கரம் என்னை கூட்டிக்கிட்டு உங்க வீட்டுக்கு போய்டுறாயா என்று கேட்டாள் சரி இப்போ எப்படிடி வீட்டுக்கு போவ என்றான், டாய் நேத்து போல அடி வாங்க தெம்பில்லடா, ஒரு ஆட்டோ புடிச்சு குடுத்ரு நான் போய்டுறேன்ன்னு சொன்னவளை முறைத்து விட்டு, உங்க வீடு தெரு முனைல இறக்கி விடறேன் நீ போய்டு என்றுவிட்டு அவள் பதிலுக்கு காத்திராமல், ஜீப்பை கிளப்பினான். அவள் உள்ளே சென்று கைப்பையை எடுத்துக்கொண்டு அவனுடன் வண்டியில் ஏறினாள்
Bạn đang đọc truyện trên: Truyen4U.Com