பாகம் 12
ஆமாம் பா இந்த பொண்ணு பாதிநாள் காலம்பற சாப்பிடாமையே அலுவலகத்திற்கு வந்துரும் பணியாள் கூறினான். எல்லோரும் கொஞ்ச நேரம் இவளை பற்றி பேசிவிட்டு அவரவர் வேலைககளை தொடர்ந்தனர். லதா எதுவும் பெரிதாக கேட்கவில்லை. அவளுக்கு இதல்லாம் புதிது. ஆர் யு ஓகே? என்று கேட்டு மட்டும் இருந்தாள். அவளுக்கு இது புதிது அல்ல ஏற்கனவே இரண்டு முறை இது போல் ஆகி இருந்தது. லதா என்னடீ ஏன் ஒரு மாதிரி இருக்க என்றாள். இல்லடி மயக்கம் வந்திருச்சு அவ்ளோ தான் என்றாள்.
சிறிது நேரத்திற்கெல்லாம் கவி வந்து விட்டிருந்தான். என்ன ஆச்சு ? கேட்டான் நிலா எதுவும் சொல்லவில்லை . எப்படி சொல்வாள் அவளுக்கு இப்போது பசி வயிற்றை வேறு வலிக்கிறந்தென்று. அவனுக்கு அவன் வீட்டில் இருந்து போன் வந்தது சாப்பிட வர சொல்லி. அப்போது கவி நிலாவிடம், வா நிலா என் வீட்டுக்கு போயிட்டு வந்துடலாம் னு கூப்பிட்டான், அவளுக்கும் அது சரி என்று தோன்றியது. சரியென்றி அவனுடன் கிளம்பினாள். கவி வழியில் எதுவும் பேசவில்லை. கவிக்கு நிலாவை பற்றி கவலை வந்து விட்டது. வீட்டிற்கு சென்றதும் யாரிடமும் எதுவும் கூறவில்லை. நிலாவிற்கு சாப்பாடு கொடுத்தார்கள், கவியும், நிலவும் சேர்ந்து உணவு உண்டனர். அப்போதும் நிலாவிற்கு வயிறு வலி குறைய வில்லை. உடனே அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக சொல்லி அம்மா கூறினார். உடனே கவியும் நிலாவும் பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு சென்றனர். அங்கே மருத்துவர் அவளுக்கு சில பரிசோதனைகள் செய்து விட்டு, அவளுக்கு வயிற்றில் சிறிது புண் இருப்பதாகவும், சரியான நேரத்திற்கு உணவும் மருந்துகளும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறி அனுப்பினார்.
அன்றிலிருந்து கவி மிக கவனமாக அவளுடைய உணவு நேரத்தில் உணவருந்த வைத்துவிடுவான். அதனாலேயே அவளுக்கு கவியை மிகவும் பிடிக்கும்.
நிலா கை அலம்பி விட்டு வருவதற்குள் சில உணவுகள் வந்திருந்தன. அனைத்தும் நிலாவிற்கு ஏற்றாற்போல இருந்தது. நிலாவிற்கு ஆச்சர்யம் கொடுப்பது கவியின் வழக்கம். எப்படி இவனுக்கு மட்டும் தன்னைப்பற்றி அனைத்தும் தெரிகிறதென்று அடிக்கடி அவள் நினைத்ததுண்டு. அப்போது அவர்கள் இருக்கைக்கு பக்கத்தில் நிலாவின் கல்லூரி நண்பர்கள் சிலர் அமர்ந்து உணவு அருந்திக்கொண்டு இருந்தனர். அதில் நிலாவின் நண்பனும் ஒருவன்.
நிலா அவர்களை பார்த்துவிட்டாள். அவர்களும் நிலாவை பார்த்து ஏன் நிலா உன்ன ரெண்டு நாளா கலம்பற பாக்க முடியல என்று கேட்டான் உனக்காக பூ வாங்கிட்டு வந்திருந்தேன் சொன்னவுடன் கவிக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது. நிலா கவனிக்க மறந்து விட்டாள். அவளது குழந்தை தன்மை எல்லா இடங்களிலும் எல்லாரிடம் இருக்கும். அது கொஞ்சம் ஒட்டி பழகுபவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.
காலையில் இருந்து நடந்த எதுவுமே சரியில்லாத காரணத்தினால் கவிக்கு இப்போது இந்த சந்தேகம். ஒருவேளை நிலா அவனை விரும்புவதால் தான் தன்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டாளோ என்று. ஆனால் அது உண்மையில்லை என்று உணரும் போது அவன் மிகவும் வருந்துவான் என்று அவனுக்கு தெரியாமல் போனது பாவம்.
நிலா அவனிடம் இல்லடா கொஞ்சம் சீக்கரம் போய்டுறேன் அதான் உன்னால என்ன பாக்க முடியல. இவன் கவி என்னோட அலுவலகத்தில ஒண்ணா வேல பாக்கறேன் என்று கவியை அவளது நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். ஆனால் அவர்கள் யாரையும் தனி தனியாக அறிமுகம் செய்யவில்லை நிலா கவியிடம். கவி இவங்கல்லாம் என்னோட காலேஜ் ல ஒண்ணா படிச்சவங்க. அவ்வளவு தான் இருந்தது அறிமுகம். நிலாவின் காலேஜ் நண்பனுக்கு இது கொஞ்சம் ஏமாற்றத்தை தந்தது. போறாக்கொறைக்கு அவள் கவியுடன் இருந்த நெருக்கம் அவனுக்கு பொறாமை உணர்ச்சியை கிளப்பி விட்டிருந்தது.
கவிக்கு இன்னும் சந்தேகம் அதிகம் தான் ஆனது. ஏன் இவள் யாரையும் தனியாக அறிமுகம் செய்யவில்லை என்று. இதை அவன் அவளிடம் கேட்டிருந்தால் அன்றே பிரச்னையின் முடிந்திருக்கும். பாவம் அவன் சந்திக்க போகும் விளைவுகள் கொஞ்சம் அதிகம் என்பது அவனுக்கு தெரியவில்லை. நிலா அவனை நோர்மல் நிலைக்கு கொண்டு வரவே உணவகத்துக்கு அழைத்து சென்றாள் அது இப்போது வேறு மாதிரி ஆகிவிட்டது.
Bạn đang đọc truyện trên: Truyen4U.Com