Chào các bạn! Truyen4U chính thức đã quay trở lại rồi đây!^^. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền Truyen4U.Com này nhé! Mãi yêu... ♥

பாகம் 14

நிலாவிற்கு வீட்டின் நினைவு வந்து விட்டது. அம்மா இப்போது என்ன பிரச்னையை கிளப்பி இருப்பாளோ எதனை பேரிடம் ஜாதகம் எடுத்துக்கொண்டு போய் மாப்பிள்ளை தேட சொல்லிருப்பாளோ தெரியாது. நிலாவின் ஆசைகள் ரொம்பவும் பெரிதல்ல, தான் ஒரு மதிக்கத்தக்க இடத்தில இருக்க வேண்டும் அவ்வளவே. ஆனால் அவள் இருக்கும் இப்போதைய நிலைமையில் அவளுடைய அம்மா என்ன சொன்னாலும் கேட்டே ஆக வேண்டும் இல்லையென்றால் அப்பாவின் அடி உதைக்கு தயாராக வேண்டும். அப்பா தன்னை மட்டும் அடிக்க மாட்டார் அம்மாவும் சேர்ந்து எனக்காக அடி வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவாள். பாவம் சிறு வயதிலிருந்து எந்த சுகத்தையும் அனுபவிக்காதவர். தந்தை இல்லாமல் தாயாரால் மட்டும் வளர்க்கப்பட்ட அவளது அம்மாவிற்க்காக அவள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டாள். இன்று நேற்று நடப்பதல்ல இப்படி ஒரு போராட்டங்கள். எல்லா பெண்களுக்கும் ஏதாவது ஒரு சூழலில் இப்படி மாட்டிக்கொள்ள வேண்டிய நிரபந்தம் இருக்கதான் செய்கின்றது. யாருக்கேனும் தியாகம் செய்யவேண்டும். யாருடனாவது ஒட்டியே வாழ வேண்டும் இதே பெண்களின் நிலைமையில். எவ்வளவு யுகங்கள் மாறினாலும் இது மாறவே மாறாது.

நினைக்கும் போதே கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. கவி கலைத்தான் அவளது நினைவுகளை. மன்னிச்சுரு நிலா உன்ன ஹார்ட் பண்ணிட்டேன். சாரி ப்பா என்றான். இல்லடா. சரி நிலா இன்னும் நீ நேத்து வீட்ல என்ன நடந்துச்சுன்னே சொல்லலியே என்றான். அப்பறம் பேசலாம் டா என்ன இங்கயே இறக்கி விற்று. நான் அம்மா பாக்கர்துக்குள்ள போய்டுறேன் என்றாள் மணி 10 தொட்டிருந்தது.

கூடவே கொஞ்சம் பயமும் தொற்றிக்கொண்டது. எப்பேர் பட்ட பெண்ணாக இருந்தாலும் அம்மா என்று வந்து விட்டால் இப்படிதானோ தனக்கு தானே நினைத்துகொண்டாள். இதையே கவியும் நினைத்துக்கொண்டான். நேற்று வரை இருந்த நிலா இது இல்லை என்பது மட்டும் அவனுக்கு புரிந்து இருந்தது. தானே நிலாவை இப்படி ஆக்கி விட்டோமே என்று தனக்கு தானே வருந்திக்கொண்டு இருந்தான். கவி வண்டியை நிறுத்தினான், நிலா இறங்கி நடக்க ஆரம்பித்தாள், கவியை திரும்பி கூட பார்க்க வில்லை. கவிக்கு வலித்தது உயிர் வரை. வண்டியை செலுத்தலானான். நிலா வீட்டின் முனை வரை கூட செல்லவில்லை. அவளது அம்மா வந்துகொண்டிருப்பது தெரிந்தது. இவள் நடையின் வேகத்தை கூட்டினாள். ஏம்மா டெய்லி இப்படி நான் காணோம்னா ஒடனே நேரம் கூட பாக்காம கெளம்பி வர. மணி 10 ஆறது மா என்றாள் . ஏண்டீ வயசுப்பொண்ணா லட்சணமா சீக்கரம் வரணும்னு இல்லாம நீ நேரம் கடந்து வந்துட்டு என்ன சொல்ற என்றாள் அம்மா அவள் பங்கிற்கு. சாப்பிட்டாயா என்றாள் ஹ்ம்ம் என்று மட்டும் நிலாவின் பதில். அப்பா கத்திண்டு இருக்காடீ. உன் தங்கையை வேறு அடிச்சுட்டார். நீ இனிமே இவ்வளவு லேட்டாலாம் வராதே. கொஞ்சம் சீக்கரம் வர்ற வழிய பாரு. வீட்டிற்குள் நுழைந்தார்கள். அப்பாவின் சத்தம் வாசலிலேயே கேட்டது தான். ஏண்டீ டெய்லி இவ்ளோ லேட்டா ஆ வந்தியண்ணா இனிமே அங்க நீ வேலைக்கு போக வேண்டாம் என்றார். அப்பா நான் அங்க வேலைக்கு போலென இவ்வளவு சம்பளம் கிடைக்காது. என்னோட வேல அப்படி. நீங்க இப்படி டெய்லி சண்டை போட்ட நான் வேலைய உட்டுட்டு தான் வரணும். அப்பறம் ஆத்துல உக்காந்திருந்தா யாரும் சாதம் போட மாட்டா. உனக்கு நான் லேட்டா ஆஹ் வர்றது பிரச்னையா இல்ல கவிக்கூட வந்தது பிரச்சனையா கேட்டுவிட்டாள் வந்த இயலாமையில். அவளும் சராசரி பெண் தானே.

Bạn đang đọc truyện trên: Truyen4U.Com