Chào các bạn! Truyen4U chính thức đã quay trở lại rồi đây!^^. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền Truyen4U.Com này nhé! Mãi yêu... ♥

பாகம் 15

அவள் கூறியது தான் தாமதம் என்றது போல் இருந்தது அவளது தந்தையின் அடி. வாங்கியது நிலாவும் அவளது அம்மாவும். இதற்க்கு தான் இவ்வளவு யோசித்தேன் அம்மா அடி வாங்கிவிட கூடாது என்பதில் கவனமாக இருந்தேனே என்றெல்லாம் நிலா மனதில் ஓட ஆரம்பித்தது. ஆனால் எதற்கும் பிரயோஜனம் இல்லை இப்போது அவள் அம்மா அழுவதற்கு இவளே காரணம் ஆகி விட்டாள் என்பது தான் நிஜம்.

எல்லாம் ஒரு வழியாக ஓய்ந்தது அவளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே வெளியில் அனுமதி அதற்குள் வீட்டிற்கு வந்து விட வேண்டும், எந்த ஆணுடனும் பழக கூடாது, அண்ணா தம்பி நண்பன் எதற்கும் அனுமதி இல்லை. இதற்க்கெல்லாம் சரி என்றால் இன்னும் கொஞ்ச நாள் வேலைக்கு செல்லலாம் இல்லை என்றால் வேலையை விட்டு விட்டு அவர்கள் சொல்லும் பையனை திருமணம் செய்து கொண்டு செல்ல வேண்டும். எல்லாவற்றிற்கும் நிலா சொன்னது சரிப்பா என்பது மட்டுமே. அவளுக்கு அழ கூட உரிமை கிடையாது. இதனை வயது வரை ஒரு நாள் கூட அவளது பெற்றோர்கள் அவளை புரிந்து கொண்டது இல்லை. ஏன் புரிந்து கொள்ள முயற்சி கூட செய்ய வில்லை என்பதே பொருத்தமான வார்த்தை.

படுத்து விட்டார்கள். யாரையும் காதலிக்கும் மனநிலையில் கூட இல்லை நிலா. முதன் முதலில் அபி, அவனை பார்த்தவுடன் பிடித்து போனது காரணம் அவனது லட்சியம். இப்போது கவி நல்ல நண்பன் ஒரு நாள் கூட அவளை பசியாகவோ சோகமாகவோ விட்டது கிடையாது. அனால் தாய் தந்தையரை எதிர்த்து அவளால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. நிலா பெயர் கூட தனியாக இருக்கும் அந்த நிலாவின் பெயரே. தனியாகவே அந்த வான் வெளியில் வலம் வரும். 1000 நட்சத்திரங்கள் இருந்தாலும் அது மட்டும் தனியாகவே இருக்கும். யாரும் வேண்டாம் என்ற மனநிலை நிலாவின் சின்ன வயதில் இருந்தே அவளுக்கு தோன்றிய விஷயம். எல்லோரும் சுயநல வாதிகளாகவே கண்ணில் பட்டார்கள். நீயின்றி நான் இல்லை என்று இதுவரை யாரும் சொன்னதில்லை அவளிடம். கவி கூட அவளிடம் உன்னை எனக்கு பிடிக்கும் நீ இருந்தால் நான் நன்றாக இருப்பேன் என்று தான் கூறினான். அதற்க்காக தான் உன்ன காதலிக்கிறேன் கல்யாணம் பண்ணிக்க ஆசை பற்றென்னு சொன்னான்.

படுத்தவுடன் நிலாவிற்கு தூக்கம் வர வில்லை. ஏதேதோ எண்ணங்கள் எதையும் இதுதான் என்று கூற இயலவில்லை. காதல் என்றால் என்ன? அது தனக்கானதொரு பாதுகாப்பை தருமா? அந்த உணர்வு எப்படி இருக்கும்? என்று பழையமாதிரியே யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.

பார்த்தவுடன் காதல், சொல்லாமலே காதல், கண்ணில் தோன்றி மனதில் காதல், காதல் தென்றல் காற்று, என்றெல்லாம் சொல்லும் காதல் ஏன் தனக்கு தோன்ற வில்லை யார் மீதும்? என்றெல்லாம் யோசனை. அவளுக்கு உன் சமையல் அறையில் படம் தான் நினைப்பிற்கு வந்தது. அந்த ரோமானிய வீரனின் கதை. அவளுக்கு மிகவும் பிடிக்கும். அந்த காதலி தன் காதலனுக்காக காத்திருக்கும் வேளையில் செய்யும் அந்த கேக் அது அவளை மிகவும் பாதித்துத்திருந்தது. காதல் என்றால் காம இச்சையில் முடியும் படங்களுக்கு நடுவே இந்த படம் அவளுக்கு பிடித்தமான ஒன்று. தன் கை கோர்த்து நடக்க, தன்னை தன்னை தோளில் தாங்க, தான் அழுதாள் கண் துடைக்க ஒரு கை இல்லையே என்று நினைத்துக்கொண்டே எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியாத நிலையில் தூங்கிவிட்டாள்.

அங்கே கவியின் நிலைமை இன்னும் மோசம். வீட்டுக்கு செல்ல மனம் இல்லாமல் வண்டியை ஒரு பாலத்தின் நடுவில் நிறுத்திவிட்டு அங்கேயே படுத்துக்கொண்டு விட்டான். நிலாவின் நிலைமை அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நேத்து வீட்ல என்ன நடந்துதுன்னாச்சும் சொன்னாலா பாரு அழுத்தம் அவளுக்கு, எதையும் யாரிடமும் எப்போதும் அவள் சொன்னதில்லை, அவள் யார் என்ன படித்திருக்கின்றாள். அப்பா என்ன செய்கின்றார். யார் யாரெல்லாம் அவள் வீட்டில் இருக்கின்றார்கள் எதுவும் யாருக்கும் தெரியாது. என்ன நிலா என்றால் அப்பறம் பேசிக்கலாம் வேலைய பாருடா கவி என்று சொல்லிவிட்டு போய்விடுவாள். வீட்டில் இருந்து போன் வந்தது. கவி எங்கப்பா இருக்க அம்மா தான் கேட்டார்கள். நிலாவை வீட்ல விட்டுட்டு வந்துட்டு இருக்கேன் மா என்றான். சீக்கரம் வாப்பா அப்பா தூங்கலை உனக்காக காத்துட்டு இருக்காரு. சரிம்மா. போன் வைத்து விட்டு வண்டியை கிளப்பினான் யோசனையுடன்.

Bạn đang đọc truyện trên: Truyen4U.Com