பாகம் 25
லதா நீ இப்போ உண்மைய சொல்லு அவர் உன்ன உண்மையா காதலிக்கறேன் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னாரா. எனக்கு பாலாஜிய பத்தி நல்லா தெரியும் அவர் அப்பேர்பட்டவர் இல்ல. உண்மைய சொல்லிடு இல்லேனா உனக்காக நிலா மானம் தான் போகும். அவ மானம் போர்த்த பத்திலாம் என்னால இப்போ யோசிக்க முடியாது கவி. அந்த பாலாஜி காதலிக்கறேன் லாம் சொல்லல ஆனா என்ன புடிச்சிருக்கு காத்திரு கேஸ் முடிஞ்சா ஒடனே அம்மா கிட்ட பேசறேன் நம்ப கல்யாணத்த பத்தின்னு தான் சொன்னான். எனக்கும் வாழ்க்கைல சில commitment இருக்கு கவி. இவன் சொல்ற வரைக்கும் wait பண்றது எனக்கு பெரிய விஷயம் இல்ல. ஆனா நாளைக்கு அவங்க அம்மா என்னை வேண்டாம்னு சொல்லிட்டாங்கன்னா எனக்கு இப்போதைக்கு எந்த holding உம் இல்ல அதான் அவன் கூட இருந்துட்டா எல்லாம் சரியா போயிடும்னு நெனச்சேன். ஆனா அந்த லூசு என்ன அசிங்க படித்திட்டான். நீ இப்போ என்கூட இரு ஆனா கல்யாணம் பண்ணிக்க முடியலேன்னா இந்த விஷயத்தை பெரிது பண்ணிடாதன்னு அவனோட safer side மட்டும் யோசிச்சான். நானும் சரி இப்போதைக்கு பாத்துக்கலாம்னு நெனச்சேன். ஊருக்கு போயிட்டு வேற பொண்ண பாத்து முடிச்சுட்டு வந்துட்டான். அதான் நானே மேலாளருக்கு போன் பண்ணி இவன பத்தி தப்பு தாப்பா சொல்லல உண்மையாவே சொல்லிட்டேன். இவன் இனிமே இந்த அலுவலகத்தில் வேலை செய்யவே முடியாது என்று அகம்பாவமாய் சிரித்தாள். தான் ஒரு பெண் தவறு செய்துவிட்டோம் என்று கொஞ்சம் கூட உடல் கூசாமல் இப்படி பேசுகிறாள் என்று அவர்கள் யோசித்துக்கொண்டிருக்கும் போதே அவர்களுக்கு போன் வந்தது அலுவலகத்தில் இருந்து நிலா பாலாஜியுடன் பிரச்சனையை செய்வதாக. அவர்கள் இவளை நினைத்து தலையில் அடித்துக்கொண்டு, நீ பாட்டுக்கு ஏதேதோ சொல்லிட்டு போயிட்ட அவ அங்க பாலாஜிக்கிட்ட பிரச்சனை பண்ணிட்டு இருக்கா, இதுல அவங்க ரெண்டு பேரும் பாதிக்க போறாங்க அது உனக்கு பெருசா தோணலையா, வந்து நீயே உண்மைய சொல்லிடு. ஏன் என் மானம் போறதுக்கா முடியாது. நீங்களே முடிஞ்சா சமாளிங்க என்றுவிட்டு அவள் மேலே அலுவலகத்திற்கு அழு மூஞ்சியை வைத்துக்கொண்டு சென்று விட்டாள். கவி அண்ணனிடம். அண்ணா இப்படி பட்ட பொண்ணா இறுக்கலேன்னா, இவளை போய் அந்த நிலா இப்படி நம்பறாளேன்னா இப்போ எப்படி இந்த பிரச்சனையை சமாளிக்கறதுன்னு எனக்கே தெரியலையேண்ணா.
இரு கவி ஏதாச்சும் யோசிக்கறேன் என்றுவிட்டு சரி நீ வா அங்க மொதல்ல என்ன நடக்குதுன்னு பாக்கலாம் அப்பறம் யோசிக்கலாம் என்று இருவரும் மேலே அலுவலகத்திற்குள் சென்றனர். அங்கே நிலா இடம் பொருள் பாக்காது சின்ன பிள்ளை தனமாக, பாலாஜியுடன் சண்டை வளர்த்துக்கொண்டிருந்தாள். எல்லோருக்கும் அது சின்ன குழந்தை தின்பண்டத்துக்கு சண்டை போடுவது போல தான் தோன்றியது. இருந்தாலும் அது அலுவலக சட்டப்படி குற்றம். ஆதலால், மேலாளர் பாலாஜி நிலா இருவரையும் அவருடைய அறைக்கு அழைத்து சென்று விட்டார். எல்லோரும் அவரவர்கள் வேலையை செய்ய ஆரம்பித்தனர். கவியின் அண்ணன் அந்த அரைக்கும் அனுமதி பெற்று சென்றார். சார் நிலா சின்ன பொண்ணு அவளை வெச்சுட்டு இந்த matter பேச வேண்டாமே. தயவு செஞ்சு கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க சார். எல்லோருக்கும் அது தெரியும் பா ஆனால் அவள் இப்படி நடந்துக்கிட்டது தப்பில்லையா. கண்டிக்க தான் கூட்டிட்டு வந்தேன். நிலா அவங்க personal விஷயம் இதுல நீ தலைஇட்டது தப்பும்மா. அது மட்டும் இல்லாமல் அவர் உன்னை விட உயர் அதிகாரி நீ அவருடைய position க்கும் கொஞ்சம் மதிப்பு குடுக்கணும் இது அலுவலகம், சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் இல்லை. நீ லதாக்கு நல்லது செய்யணும்னு நெனைக்கறது தப்பில்லேம்மா, ஆனாலும் அவங்க ரெண்டுபேர் விஷயத்தில நீ தலையிடறது தப்பு. நீ இருவருக்கும் சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை. நட்புங்கறது லாம் இப்போ இங்க வேலைக்கு ஆகாதும்மா. பாத்து நடந்துக்க இனிமே என்று கொஞ்சம் கடுமையாகவும் அதே நேரம் நிலாவிற்கு புரியும் படியும் எடுத்துக்கூறினார். நிலா தலை குனிந்து நின்றாள். நிலாவின் மனதில் கனல் எரிந்து கொண்டு இருந்தது ஒரு ஆண் ஒரு பெண்ணை ஏமாற்றி விட்டான். எப்படி பொறுத்துக்கொள்வது என்று மட்டும் உணர்ந்த நிலாவிற்கு அங்கே இருந்த உண்மை புரியவில்லை. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று மூத்தோர் சொல் எப்படி பொய்க்கும். சார் நான் பண்ணது தப்புதான். ஆனாலும் இவர் எப்படி என்னோட நண்பி லதாவை ஏமாற்றலாம். அது அவர் பண்ண தப்பு தானே அத தானே நான் கேட்டேன். என்ன மட்டும் கோச்சுக்கறீங்க, அவரை நீங்க ஒண்ணுமே சொல்லல. நிலா அத நான் பாத்துக்கறேன்மா நீ இப்போ போகலாம், என்று அனுப்பிவிட்டார். அங்கே கவியின் அண்ணனும் பாலாஜியும் மட்டும் இருந்தனர். சாரி பாலாஜி சார். என்றுவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றாள். வெளியில் வந்து விட்டாலும் அவளுக்கு கோவம் குறையவில்லை. உள்ளே நடந்த பேச்சுவார்த்தை யாருக்கும் காதில் விழ வில்லை. சிறிது நேரத்தில் லதா அழைக்கப்பட்டாள். உடனே கவி நிலாவை அழைத்துக்கொண்டு வெளியே சென்று விட்டான். நிலா வாடீ உன்கிட்ட ஒன்னு சொல்லணும், என்னடா இப்போ போய் கூப்படற, அவங்க வெளில வந்தா என்னனு கேக்கனும்னல போடா நான் வர மாட்டேன். இல்லடீ நீ வா உங்கிட்ட தான் சொல்லணும். படுத்தறடா சரி வரேன். அவன் அவளை வராண்டாவில் நிறுத்தினான். என்னடா எதுக்கு கூப்பிட்ட, நிலா உனக்கு அறிவே இல்லடீ, போயும் போயும் இந்த லதாக்கு உதவி பண்ணனும்னு நெனச்சியே அவள் நெனைக்கறது தப்பா சரியா எதுவுமே யோசிக்கல நீ. இப்போ நான் சொல்றத மட்டும் கேளு full explanations க்கு இப்போ நேரம் இல்ல. லதா தப்பா யோசிக்கறா அதுக்கு நீ உடந்தையா இருக்காத அண்ணா இதை உன்கிட்டக சொல்ல சொன்னாரு, அவர் அப்பறம் எல்லாத்தையும் சொல்றாராம். சரியா பதில் சொல்லு, ஹ்ம்ம் சரிடா. ஆனாலும் எனக்கு மனசு ஓப்பலை டா. அவ தப்பலாம் இல்லடா. அவ தப்போ சரியோ நீ இப்போதைக்கு அவளை விட்டுட்டு தனியா இரு போறும். மத்தது அப்பறம் சரியா ? ஹ்ம்ம். உள்ளே போ. ஹ்ம் உள்ளே வந்து விட்டனர். அப்போது லதா பாலாஜி மற்றும் கவி அண்ணனும் வெளியில் வந்திருந்தனர்.
Bạn đang đọc truyện trên: Truyen4U.Com