Chào các bạn! Truyen4U chính thức đã quay trở lại rồi đây!^^. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền Truyen4U.Com này nhé! Mãi yêu... ♥

பாகம் 27

நிலா வீட்டிற்கு கிளம்பும் போது மணி 6.30 தொட்டிருந்தது. அன்று பேருந்து எதுவும் கிடைக்க வில்லை காத்திருந்தாள். அவளுக்கு அது புதிதல்ல. ஆயினும் வேறு நாளாக இருந்திருந்தால் இந்நேரம் கவிக்கு போன் செய்து வந்து அழைத்துச்செல்ல சொல்லிருப்பாள். ஆனால் இன்று ஏதோ அவளை தடுத்தது. என்னவென்று அவளுக்கும் எதுவும் புரிபடவில்லை. ஆயினும் அவனை அழைக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். அவளுடைய நண்பன் குமார் வந்திருந்தான் அலுவலக பஸ் நிலையத்திற்கு, இவளுக்கு அது எந்த சந்தேகத்தையும் தரவில்லை, வாடா என்ன இந்தப்பக்கம், இல்லப்பா இங்க ஒரு வேலையா வந்தேன் உன்ன பாத்தேன் அதான் நின்னிட்டேன். பஸ் எதுவும் வரல போல, வா ஆட்டோ புடிக்கறேன் ஒண்ணா போய்டலாம் என்று அழைத்தான், அதுவும் சரி என்றே பட்டது நிலாவிற்கு. சரிடா ஷேர் பண்ணிக்கலாம் ஆட்டோ இருக்கா பாரேன். எனக்கு கொஞ்சம் நேரம் ஆயிடுச்சு என்றாள். இருவரும் ஒரு ஆட்டோ பிடித்து செல்ல ஆரம்பித்தனர். வரும் வழியில் குமார் கேள்விகள் கேட்க ஆரம்பித்தான் மெதுவாக, என்ன நிலா ஆபீஸ் லாம் எப்படி போகுது, ஹ்ம் இப்போதான் கொஞ்சம் settle ஆகிருக்கேண்டா, smooth ஆஹ் தான் போகுது. ஹ்ம் அன்னைக்கு ஹோட்டல் ல ஒருத்தர அறிமுகம் செஞ்செல்ல அவர் யாரு ? அதான் சொன்னேனேடா அவன் கவி, என்னோட ஒண்ணா வேல பாக்கறான். ஹ்ம் ஒண்ணா ஹோட்டல் ல சாப்பிடற அளவுக்கு நண்பனா? அவன் கூட தான் எப்பவும் இருக்க!! கேள்விகள் எல்லாவற்றிக்கும் சகஜமாக பதில் கூறி வந்த நிலாவிற்கு அவன் கூட தானே எப்பவும் இருக்க கேள்வியின் தொனி மாறிருந்தது தெரியவில்லை. இல்லடா, அவன் அன்னைக்கு பசிக்குதுண்ணான், அப்படி தான் எல்லா நேரமும் ஒண்ணா இருக்கறாப்ல ஆயிடுது. அவன் என் கூட வேல பாக்கறாப்ல இருக்கும் அலுவலகத்திலும், சோ எப்பவும் ஒன்னாவே இருக்கோம் அவன் எனக்கு நல்ல நண்பன், நானுன்னா அவனுக்கு கொஞ்சம் புடிக்கும் அவ்ளோதான்.

கொஞ்சம் இஷ்டம்னா என்னப்பா உன்ன காதலிக்கறானா? இந்த கேள்வி நிலாவிற்கு கொஞ்சம் சுருக்கென்று பட்டது. குமார் ஒரு சாதாரண நண்பன் அவ்வளவே. அதற்க்கு மீறி அவனுக்கு இவள் எந்த இடமும் தரவில்லை. வாரத்தில் 3 நாட்கள் இவளை பார்க்க காலையில் வருவான், பூ பிஸ்கட் என ஏதாவது தருவான். இவளும் நட்பு என்ற ரீதியில் மட்டுமே அவற்றை பெற்றுக்கொள்வாள். நிலா இருக்கும் நிலையில் யாரையும் காதலிக்க முடியாது என்பதே நிதர்சனம். அதை அத்தனை பேரும் மறந்து அவரவருக்கு ஏற்றாற் போல் ஏதேதோ கற்பனைகளில் மிதந்து தன்னையும் காயப்படுத்துகிறார்கள் என்றே தோன்றியது நிலாவிற்கு. ஆட்டோ நிலா வீட்டின் அருகில் வந்து விட்டிருந்தது. நாளைக்கு காலைல உனக்கு இதற்க்கு பதில் சொல்றேன் குமார், இது கூட உன்ன இன்னும் நான் நண்பனா நெனைக்கறதால சொல்றேன் என்றுவிட்டு இறங்கி விறுவிறு வென நடக்க ஆரம்பித்தாள் தனது வீட்டை நோக்கி.

குமாரை பற்றி நிலாவிற்கு எந்த கெட்ட அபிமானமும் கிடையாது. ஆனால் இந்த கேள்வி அவளுக்கு அவனை பற்றி யோசிக்க வைத்து விட்டது. வீட்டிற்குள் சென்றதும் அம்மா பிடித்துக்கொண்டாள். ஏண்டீ ஆத்துக்கு இவ்ளோ லேட்டா வர. அம்மா நீ 8 மணிக்குள்ள தான் வர சொன்ன, எனக்கு பஸ் கிடைக்கவே இல்ல ஆபீஸ் ல வேற நிறைய பிரச்சனை, நீ வேற படுத்தாத, சாதம் இருந்தா போடு இல்ல நான் போய் படுத்துண்டுறேன். ஏண்டீ கேள்வி கேட்டாலே இப்படி ஏதாச்சும் சொல்லிண்டே இருக்க, அப்பா உனக்காக காத்துண்டு இருந்தார், இப்போதான் அந்தண்டை போனார். போ போய் என்னனு கேட்டுண்டு வா, அப்பறம் சாதம் போடறேன். அம்மா பசிக்கறதம்மா, எத்தனை நேரம் நீ கொடுத்த மோர் சாதம் வயதில இருக்கும், நான் உடை மாற்றிண்டு வரேன் நீ சாதம் போடு நான் அப்பறம் அப்பாகிட்ட போறேன், அப்பா கண்டிப்பா எனக்கேதும் வேலை வெச்சுருப்பா என்று உடை மாற்ற சென்றாள். குமார் கவி அலுவலகம் அத்தனையும் மறந்தது. அப்பா என்ன குண்டு வெச்சுருக்கறார் என்று யோசனை சென்றது.

உடை மாற்றி முகம் கைகால்கள் அலம்பிக்கொண்டு வந்தாள் உணவருந்த, யாரும் உண்ணவில்லை என்று தெரிந்தது, அம்மா எல்லாரையும் கூப்பிட்டார்கள் வாங்கோண்ணா நிலா வந்துட்டா கொழந்தேளையும் வர சொல்லுங்கோ எல்லாரையும் ஒண்ணா உக்காத்தி சாதம் போட்டுடா எனக்கும் சித்த வேல முடியும். எல்லோரும் வந்தனர். அன்று இரவு உணவு கொஞ்சம் சாதாரணமாக இல்லாமல் ஸ்பெஷல் ஆக இருந்தது. என்னம்மா இன்னைக்கு சாப்படலாம் தூள் பண்ணிருக்க. அப்பா retirement பணம் வந்திறுத்துடீ அதான் அப்பா எல்லாம் பண்ண சொன்னார். நீ சாப்பிடு எல்லாம் அப்பறம் நிதானமா பேசலாம் என்றவுடன் எல்லோரும் உண்ண ஆரம்பித்தனர்.

எந்த சூழலையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் நிலையில் இல்லை நிலா இப்போது. யோசனையாகவே சாப்பிட்டு முடித்தாள். எல்லோரும் மாடியில் இருக்கும் அறைக்கு சென்றனர். அங்கே கொஞ்சம் காற்று வரும் எதிரே ஒரு சிறிய குன்று அதனை சுற்றி இருந்த வீடுகள், அதனால் அது ரம்யமாக இருக்கும் அந்த நேரத்தில். அம்மாவும் மேலே வந்தாள். அப்பா பேச ஆரம்பித்தார். அம்மா நிலா நாங்க உனக்கு இப்போ மாப்பிள்ளை பார்க்க போறேம்மா, ஜாதகம் லாம் எடுத்து கொஞ்சம் பாத்து வெச்சுட்டேன். இப்போ கல்யாணம் உனக்கு பண்ணினா சரியா இருக்கும்னு படறது நேக்கு. அம்மாவும் உனக்கு கல்யாணம் பண்ணிட்ட நிம்மதியா இருக்கும்னு யோசிக்கறா. உன்கிட்டக்க வேணுமா வேண்டாமான்னு கேக்க இதை சொல்லலைம்மா, பண்ண போறேன் உன்ன தயார் செஞ்சுக்கோன்னு சொல்றதுக்கு தான் கூப்பிட்டேன். அம்மா எனக்கு 20 வயது பொறக்க தான் போறது அதுக்குள்ள எப்படிம்மா, என்னடீ இப்போ பாக்க ஆரம்பிச்சா தானே சரியா இருக்கும். நாளைக்கு கொஞ்சம் அலுவலகத்தில் இருந்து சீக்கிரம் வந்திரு அப்பா வெச்சுருக்கற retirement பணத்தை வெச்சு உனக்கு உன்னோட தங்கைக்கும் ஒரு தாலிக்கொடி வாங்கி வெச்சுடறேன், நாளைக்கு நாள் நன்னாயிருக்கு அதுக்கு தான் உன்ன இப்போ இங்க கூப்பிட்டது. நீ போய் தூங்கு எதையும் நெனச்சு கொழப்பிக்காத என்றாள். இத்தனை பாரம் எப்படி இந்த வயது பெண் தாங்குவாள் என்று யாரும் யோசனை செய்யவில்லை. அவர்கள் இஷ்டத்திற்கு ஆள் ஆளிற்கு ஒரு சுமையை ஏற்றி விட்டே சென்றனர்.

Bạn đang đọc truyện trên: Truyen4U.Com