Chào các bạn! Truyen4U chính thức đã quay trở lại rồi đây!^^. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền Truyen4U.Com này nhé! Mãi yêu... ♥

பாகம் 29

ஜீப் கிளம்பியது, நிலா ice cream ஐ சுவைத்தபடி, அவனுடன் பேச ஆரம்பித்தாள், கவி உனக்கு இந்த குமார பாத்தோன்ன என்ன தோணுது, சட்டுனு சொல்லு, எனக்கு என்ன தோணுதா, என்னடீ என்ன போய் கேக்கற, அவன் உன்னோட கூட படிச்சவன் தானே, ஆமாம்டா, ஆனால் அவன் ஆரம்பத்தில் இருந்தே சரி இல்லையோ என்று தோணுது. என்ன சரி இல்லன்னு இப்போ போய் தோணுது. இல்லடா நேத்து உங்க வீட்லேந்து கிளம்பி அங்க பக்கத்தில இருக்கற பஸ் stand ல நின்னுட்டு இருந்தேன் வந்தான் ஆட்டோ புடிக்கரென் போலாம்னான். சரின்னேன், ஆட்டோ ல கூட வரும்போது ஏதேதோ கேள்விலாம் கேட்டுட்டு வந்தான் பதில் சில்லிட்டே வந்தேன், என்ன கேள்வி கேட்டான்னு சொல்லு, எல்லாம் நெனப்பில்லடா கடைசியா ஒரு கேள்வி கேட்டான் அது மட்டும் தான் அவனை பத்தி என்ன யோசிக்க வெச்சுது. என்ன கேள்வி, கவி உன்ன காதலிக்காரனா ன்னு கேட்டான். எனக்கு சுருக்குன்னு இருந்துச்சு. இவன் என்ன love பண்றான்னு நினைக்கறேன், அதான் உன்கூட என்ன பாத்தோன்ன அவனுக்கு இதல்லாம் தோணுது. நான் சொல்றது சரின்னா நாளைக்கு காலம்பற அவன் என்கிட்டே propose பண்ணுவான், அது மட்டும் இல்ல இன்னைக்கு முழுதும் என் பின்னாடியே என்ன watch பண்ணுவான். நீ எனக்கு ஒரு உதவி பண்ணு கவி, என்னடா உதவின்னு லாம் சொல்லிட்டு இருக்க என்ன பண்ணனும், இன்னைக்கு party முடிஞ்ச உடனேயே நீயே என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போய் விட்று. சரி நீ என்னவோ பேசணும்னு சொன்ன, அது என்ன என்றதும். அவள் வெளியில் நாம் எங்கே இருக்கிறோம் அலுவலகத்திற்கு கிட்டே வந்துட்டோமா, gift வாங்கணும்னு சொன்னேன்ல, அது நான் மதியம் வாங்கிட்டு வரேன், ஆபீஸ்க்கு இன்னும் தூரம் இருக்கு நீ சொல்லு.

கவி இப்போ நாம பேசப்போறது ரொம்ப முக்கியமான விஷயம். கவனமா கேளு. நீ என்கிட்ட காதலிக்கறேன்னு சொல்றதுக்கு முன்னாடியே லதா என்கிட்டே நீ காதலிக்கற போல அவனை கேளுன்னு சொல்லிட்டா, இது போல அலுவலகத்தில நெறய பேருக்கு சந்தேகம் இருக்கும் உன்னையும் என்னையும் பத்தி. என் அம்மா வேற எனக்கு கல்யாணம் செய்து வெக்க திட்டம் போட்டுட்டு இருக்காங்க, அவங்களுக்கும் என் மேல சந்தேகம் வந்துருக்கு, அதனால நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன்.

எதுவும் பேசவில்லை கவி. அவள் சொல்வதை சொல்லி முடிக்கட்டும் நாம் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று அமைதி காத்தான். என்ன முடிவு பண்ணிருக்கேன்னு கேக்க மாட்டியா கவி.. சொல்லும்மா என்றான் அமைதியாக, நீ அலுவலத்தை விட்டு resign பண்ணிட்டு business ஆரம்பிக்கணும், இல்ல நான் வேலைய resign பண்ணிட்டு வேற வேல தேடணும். ரெண்டுல எது நடந்தாலும் எனக்கு சந்தோஷம் தான். ஆனா ரெண்டாவது நடந்தா எனக்கு கொஞ்சம் நிம்மதி கிடைக்கும்.

அதிர்ந்தான் கவி. அதற்குள் அலுவலகம் வந்து விட்டது. நிலா மனதில் இருந்த உறுதி இருவரும் இந்த அலுவலகத்தை விட்டு செல்ல வேண்டும் என்பது. அதை சொல்லாமல் சொல்லிவிட்டாள்.  அவன் உறுதி செய்து கொள்ள விரும்பினான். நிலா நீ நாம ரெண்டு பெரும் இனிமே இங்க இருக்க வேண்டாம்னு சொல்றயா.

ஏண்டா tubelight இதை தானேடா இவ்ளோ நேரம் சொல்லிட்டு வந்தேன். எதுக்கு நிலா நீதான் என்ன காதலிக்கலேன்னு சொல்லிட்டயே, டேய் நான் சொல்லிட்டேண்டா ஆனா உன்னையும் என்னையும் சுத்தி இருக்கற உலகம் நம்பள நிம்மதியா இருக்க விடாது. அடுத்த பிரச்சனை நாமளா தான் இருப்போம். லதா பாலாஜி வேலைய விட்டு போன அடுத்த வேலை அவர்களுக்கு நம்பள டார்கெட் பண்றதுதான். அதான் சொல்றேன். நான் பாலாஜி அண்ணா கிட்ட இதை நானா சொல்ல வேண்டாம்னு நினைக்கறேன். நீயே முடிவு பண்ணி செய்யறாப்ல பண்ணிடு நானும் வேற வேலை தேடறேன், ரெண்டுபேரும் இனிமே நம்ப வாழ்க்கை முன்னேற்றத்தை யோசிப்போம் இதான் நல்லதுன்னு நினைக்கறேன் என்று முடித்தாள். அவனின் எந்த பதிலுக்கும் அவள் நிற்க வில்லை.

"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!"

அவளின் இந்த முடிவினால் தான் கவியின் வாழ்க்கை தழைத்தோங்க போகின்றது என்பதை கவி உணர நேரம் ஆகும்.

Bạn đang đọc truyện trên: Truyen4U.Com