பாகம் 5
காலை முதல் இரவு வரை நடந்த அனைத்தும் மனதில் வந்து போனது. அபி அவனையும் காதலிக்க வில்லை. ஆனால் அவனை இன்று மனம் தானாக நினைத்து கொண்டு இருந்தது. ஏன் என்று தெரியவில்லை இதோ இப்போது கவி நல்ல நண்பன் ஆனால் இனிமேல் அவனுடன் சாதாரணமாக இருக்க முடியுமா சந்தேகம் தான், மனது சொல்லியது. எது காதல் எதுவும் புரியவில்லை. சின்ன வயதில் நிறைய ஆசைகள் கனவுகள் எல்லோருக்கும் இருக்கும். காதல் அப்படீன்னா என்ன அதனுடைய உணர்வுகள் எப்படி இருக்கும், எப்படி அடைவது அப்படி என்றால் என்ன, காதல் வந்தவர்கள் ஏன் இவ்வாறு இருக்கிறார்கள் எதுவும் தெரயவில்லை நிலாவிற்கு. யோசித்து பார்த்ததில் குழப்பமே மிஞ்சியது, எப்போது தூங்கினால் என்று தெரியவில்லை.
மறுநாள் எல்லோருக்கும் நன்றாகவே விடிந்தது. நிலாவிற்கு மட்டும் விடியும் முன்னரே பிரச்சினைகள் காத்திருந்தன. வீட்டில் சுப்ரபாதம் கேட்பதற்கு பதில், அம்மாவின் குரல் கேட்க ஆரம்பித்து இருந்தது, ஏற்கனவே அவளுடைய சிந்தனை கவி லதா மற்றும் அலுவலக வேலை எல்லாவற்றிலும் இருந்தது. அப்போதுதான் அவளது அம்மா பேசியது காதில் விழுந்தது அவள் அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார் ஏண்ணா பேசாத அவளுக்கு ஒரு மாப்பிள்ளையை பாருங்கோ கல்யாணம் பண்ணி வெச்சுடுடலாம் அதுக்கப்ரம் நடக்க போறது பத்தி நாம கவல பட வேண்டாம் என்று பேசிக்கொண்டு இருந்தார்கள். நிலா அதிர்ச்சி ஆக வில்லை அவளுக்கு தெரியும் இதான் அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கும் என்று. அவர்ளுக்கு நிலா தாமதமாக வந்தது கூட தவறில்லை, ஆனால் கவியுடன் வந்தது தான் பெரிய விஷயமாக தோன்றி இருக்கும், அவர்களை, குறை கூறி என்ன ஆக போகின்றது, நடுத்தர குடும்பத்தில் கூட அவள் பிறக்க வில்லை, திரும்ப திரும்ப அவள் மனதில் தோன்றுவது காதல் என் றால் என்ன என்பது மட்டுமே.
அப்பா என்ன சொல்ல போகின்றார் என்பதில் காதை வைத்துக்கொண்டு அமைதியாக இருந்தாள் நிலா, நீ சொல்றதும் சரி தானம்மா பாக்கலாம், ஜாதகத்தை எடுத்து ஜோசியரிடம் குடுத்து விட்டு வருகிறேன், நாள் நன்னா இருக்கா பாரு என்றார், இவளை கல்யாணம் பண்ணிக்கொடுத்தா தான் அடுத்து இருக்கறவளுக்கு எல்லாம் என்ன பண்ணனும்னு யோசிக்க முடியும் என்றார், அவ்வளவு தான், நிலாவின் எதிர்காலம் பற்றிய பயம் தோன்ற ஆரம்பித்து விட்டது, சராசரி பெண்கள் போல் தான் இனி என்று நினைத்துக்கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பி விட்டாள், சீக்கரம் வந்துரு நிலா அம்மா எப்பவும் போல். சாப்பிட வில்லை அம்மா மதியம் சாப்பாட்டுக்கும் ஒன்றும் தர வில்லை. ஏன் என்று அவளால் யோசிக்க கூட முடியவில்லை, கவி இப்படி பண்ணிட்டியேடா பாவி, என்று மனது நிறைய அவனை திட்டிக்கொண்டு வந்தாள்.
எப்பவும் வரும் நண்பன் இன்று வர வில்லை, அதையும் அவளால் யோசிக்க முடியவில்லை,
பேருந்து நிலையத்தில் கவி காத்திருந்தான், நிலா திகைத்து பார்த்தாள் ஆனா ஒன்னும் பேசலை, நிலாம்மா, இங்க பாருடா, நான் செஞ்சது தப்புனு நீ நடந்துக்கறது வெச்சே தெரியுதும்மா ஆன்னா அதுக்காக பேசாமெல்லாம் இருக்கறது ரொம்ப அதிகமா தோணல உனக்கு, என்ன ஆச்சு அம்மா நேத்து கோச்சுண்டங்களா, கேட்டான். சாப்டய, இல்லயா கேட்டான், எப்பவும் போல எல்லாம் நடந்து கொண்டான், ஆனால் நிலா தான் மாறி இருந்தாள். ஒரு போடா வாச்சும் சொல்லிடும்மா, என்றான், அதற்கும் நிலா ஒன்னும் சொல்ல வில்லை, நிலா பஸ் ஸ்டாண்ட் ல இருக்கோம், எனக்கு கொஞ்சம் ஒரு மாதிரியா இருக்கு, இப்படி நீ இருந்தா ன்னு சொல்லிட்டு கையை பிடுச்சு அவனுடைய ஜீப்பில் உக்கார வைத்தான். நிலாவிற்கும் என்னவோ போல் ஆகி விட்டிருந்தது.
Bạn đang đọc truyện trên: Truyen4U.Com