பாகம் 7
கவியை பற்றி கொஞ்சம் பாக்கலாம் இப்போ, கவி தன் தாய் தந்தையருக்கு இரண்டாவது மகன், வீட்டின் செல்லக் குழந்தை, அளவுக்கு அதிகமான செல்வம், சிறு வயதிலிருந்தே எல்லோரும் அவன் மீது வைத்திருந்த அன்பு அவனை திக்கு முக்காட வைத்து இருந்தது. அந்த அன்பே, அவனை எதிலும் முன்னேற விடாமல் செய்து விட்டது, அதனால், படிப்பு வேலை எதிலும் அவன் சரி இல்லாதவனாய் ஆக்கிருந்தது, படிப்பிலும் அவன் ஆகா ஓகோ என்றல்லாம் இல்லை ஏதோ சராசரி பட்ட படிப்பை முடித்திருந்தான். எந்த வேலையும் கிடைக்க வில்லை, கிடைத்தாலும் போக மாட்டேன் என்று வீட்டிலேயே இருந்து அம்மாவிற்கு உதவிகள் செய்து கொண்டு இருந்தான் அவன் அண்ணன் படித்து பெரிய வேலை கல்யாணம் மற்றும் குழந்தை என வாழ்வில் செட்டில் ஆகி விட்டிருந்தான், இவனை நினைத்து கவலை கொண்ட இவனது தந்தை இவனுடன் பேசுவதை நிறுத்தி விட்டிருந்தார், வீட்டில் எல்லோரும் இவன் மேல் கவலை கொள்ள வேண்டிய சூழ்நிலையில் எல்லோருமே மாறி இருந்தனர், இவனுக்கு தான் தனியானது போல் ஒரு உணர்வு வந்திருந்தது, திடீரென்று எல்லாம் கைக்கு மேல் போனது போல ஆனது, இந்நிலையில் தான் அவனது அண்ணா அவனை அவன் வேலை செய்யும் அலுவலகத்தில் கொண்டு வந்து விட்டிருந்தான், அவனுக்கு கொஞ்சம் பொறுப்பு வரும் என்று.
முதல் நாள், அன்று அலுவலகத்திற்கு அவன் உள்ளே நுழைந்தான், அவனை அங்கிருக்கும் வரவேற்பறையில் இருக்கையில் அமர வைத்து விட்டு அவன் அண்ணன் உள்ளே மேல் அதிகாரியை பார்க்க சென்று விட்டான், கவிக்கு எல்லாம் புதிதாக இருந்தது, அப்போது அவசர அவசரமாக ஒரு பெண் உள்ளே நுழைந்தாள், ஒரு மஞ்சள் நிற சுடிதார் அணிந்திருந்தாள், ஒப்பனை இல்லை, அளவான கேசம், அதில் கொஞ்சமாக, மல்லிகை பூ, பார்க்க அவள் அப்படியே பிராமின் குலத்தை சேர்ந்தவள், என்று வெட்ட வெளிச்சமாக தெரிந்தது, சிறிய மூக்கு அதில் ஓற்றைக்கள் பதித்த மூக்குத்தி, பாலும் தயிரும் நெய்யும் சேர்த்து சாப்பிட்ட வனப்பு உடலில் தெரிந்தது, ஆனால் மிகவும் ஒல்லியான தேகம், கொஞ்சம் வறுமை தெரிந்தது, கையில் சிறிய கைப்பை, கொஞ்சம் காகிதங்கள், சிறு புயலென அவன் முன்னே வந்து நின்றாள், சார் இன்னைக்கு என்ன வேலைக்கு சேர சொன்னாங்க, நான் யாரை பாத்து, டாக்குமெண்ட்ஸ் வாங்கிக்கணும் என்று கேட்டாள் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை, அவள் மேல் இருந்த கண்ணை எடுக்கவே கொஞ்சம் சிரம பட்டுக்கொண்டு இருந்த நேரத்தில் அவள் கேட்ட வினாக்கள் எதுவுமே அவன் காதுகளில் விழவில்லை, ஹலோ நான் யாரை பாக்கணும்னாச்சும் சொல்லுங்களேன் ப்ளீஸ் என்றாள், அப்போது உள்ளிருந்து வந்த அவனுடைய அண்ணன் (அப்போது நிலாக்கு தெரியாது அது கவியின் அண்ணன் என்று). என்னம்மா, என்ன வேணும்னு கேட்டார், நிலா, நான் புதுசா வேலைக்கு வந்திருக்கேன் சார், யாரை பாக்கணும் என்ன வேலைனு இவர்ட்ட கேட்டேன், இவன் இப்படி பாத்துக்கொன்ட இருக்காரு ஒண்ணுமே சொல்லலைன்னு சொன்னாள், அவனும் இன்னைக்கு தானம்மா வேலைக்கு வந்திருக்கான் அவனுக்கும் இது புது அலுவலகம், என்று கூறிவிட்டு, கொஞ்சம் உக்காரும்மா, யாரையாச்சும் கூடி வந்து எல்லாத்தையும் சொல்ல சொல்கிறேன், என்று சென்றுவிட்டார், நிலா அவன் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள், அவளுக்கு கொஞ்சம் கோவம் வந்திருந்தது, வாய தொறந்து சொன்ன என்ன, எப்படி பாக்குது பாரு இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி என்று வாயை முணுமுணுத்தாள், அது அவன் காதில் விழுந்தாலும் அதை காண்பித்து கொள்ள வில்லை, அவனுக்கு அவளை பிடித்து போயிருந்தது, அவளுக்கும் அவனது குழந்தை தனமான கண்கள் பிடித்து இருந்தது, அதன் பிறகு நிறைய நேரங்கள் அவன் நினைத்ததுண்டு என் தனக்கு இவளை பிடித்திருக்கிறதென்று, இருவரும் ஒன்றாய் தான் வேலைக்கு சேர்ந்தார்கள், ஆனால், நிலா அவளுடைய வேலை திறமையால், இரண்டு முறை, நல்ல பெயரும், பதவி உயர்வும் ஒரு வருடத்தில் அடைந்திருந்தாள், கவியும் அவனுக்கு தெரியாத எல்லாவற்றையும் நிலாவிடமே தான் கேட்டு தெரிந்து கொண்டிருந்தான், மற்றவர்களிடம் கேட்பதில் அவனுக்கும் கொஞ்சம் மரியாதை குறைச்சல் போல தோன்றியது, நிலா அவனுக்கு உற்ற தோழி ஆகி இருந்தாள், ஆனாலும் அவளிடம் தனக்கு ஒரு ஈர்ப்பு இருப்பதை அவ்வப்போது உணர்ந்து தான் இருந்தான்.
Bạn đang đọc truyện trên: Truyen4U.Com