பாகம் 8
நான் ஏற்கனவே எழுந்திருந்த பாகம் 8 எப்படி delete ஆச்சுனனு தெரில, அதனால அதற்க்கு பதில் இதை எழுதியிருக்கேன் கொஞ்சமா தான் எழுத முடிஞ்சுது. ஏதேனும் தப்பு இருந்தா மன்னிச்சு கோங்கப்பா.
கவியும் நிலாவும் எப்போதும் ஒன்றாவே சுற்றி திரிந்தனர், மற்றவர்கள் அவர்களை பற்றி தவறாக நினைக்காத வண்ணம், நிலா நடந்து கொண்டுவந்தாள். இருந்தாலும் கவியின் அண்ணன் அவர்கள் இருவரை பற்றியும் கவியின் வீட்டில் சொல்லி வைத்திருந்தான். நிலாவை அவர்கள் குடுப்பதில் எல்லோருக்கும் மிகவும் பிடித்திருந்தது, அவளால் தான் கவி இந்த நிலைக்கு உயர்ந்திருக்கின்றான் என்பதில் அவர்களுக்கு மிகவும் சந்தோஷமாகவே இருந்தது. கவி அவன் வீட்டில் பழைய நிலைக்கு உயர்த்திருந்தான். நிலா அடிக்கடி கவி வீட்டிற்கு சென்று வருவதும், விஷேஷ நாட்களில் வீட்டில் இருந்து நிலாக்கு ஏதேனும் வருவதும் என நாட்கள் சுகமாக கழிந்தது.
கவி சுயமாக தொழில் துவங்க வேண்டும், அதற்க்கான முயற்சிகள் செய்ய அவனை தயார் செய்யவேண்டும் என்று நினைத்திருந்த அவனது குடும்பத்தாருக்கு இது ரெட்டிப்பு சந்தோஷத்தை தந்தது. நிலாவின் குணமும் அவளது அழகும் எல்லோருக்கும் பிடித்து போயிருந்தது. எல்லாவற்றிலும் அவளுக்கென்று ஒரு பங்கு அவர்கள் வீட்டில் இருந்தது நிலாவிற்கும் ஒரு அதிகப்படியான சந்தோஷத்தை கொடுத்தது.
நிலா எப்போதும் கவியுடன் இருந்தால் நன்றாக இருக்கும் அவனது வாழ்க்கையும் நன்றாக இருக்கும் என்று நினைத்த அவனது அண்ணி, ஏண்டா கவி நீ வேணும்னா அந்த பொண்ணுக்கிட்ட பேசிப்பாரேன் என்று கூறினார். என்னனு அண்ணி கேப்பேன், அவள் என்னோட சம்பளம் அதிகம் வாங்கறா, என்னைவிட இன்னும் அதிகமா வேற புடிச்சிருக்கா நான் எதையாச்சும் பேசி அவளை காய படுத்திய போறேன் அண்ணி என்றான். அதெல்லாம் இல்லடா நீ பேசிப்பரென் என்று கூறினார், அவனும் சரி அண்ணி அவளோட பொறந்த நாள் வர போகுதுல்ல அன்னைக்கு பேசறேன்னு சொல்லிட்டு நகர்ந்தான்.
இவர்கள் இருவரும் இவ்வாறு இருப்பது லதாவிற்கு சற்று பொறாமையாக இருந்தது.
Bạn đang đọc truyện trên: Truyen4U.Com