Chào các bạn! Truyen4U chính thức đã quay trở lại rồi đây!^^. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền Truyen4U.Com này nhé! Mãi yêu... ♥

பாகம் 9

கவிக்கு நிலா லதாவின் பெயரை சொன்னவுடன் ஒரு திகைப்பு இருந்தது, ஏனெனில் கவி லதாவுடன் அதிகம் பேச மாட்டான், அவனுக்கு லதாவின் மேல் அவ்வளவு நல்ல அபிப்ராயம் இல்லை, அவளின் நடவடிக்கைகள் கொஞ்சம் மேல் நாட்டு பாணியில் இருக்கும், அவனுக்கு பிடிக்காது, ஏன் பலரும் முகம் சுளிக்கும் வண்ணமே இருக்கும். அவளின் உடுப்புகள் பெரும்பாலும் உடலின் அங்க அசைவுகளை வெளிப்படுத்துவனவாகவும் அவளின் ஹை ஹீல்ஸ் சத்தமும், யாருக்கும் பிடிக்காது, அவள் அந்த அலுவலகதில் வரவேற்பளினியாக, பணியாற்றி வந்தால், அவளுக்கு கவி நிலா, ஒன்றாக இருப்பது பொறாமையை தந்தது, அதனால், அவர்களிடம் ஒரு பிரிவினை உண்டாக்க, நிலாவை திரித்து விட்டாள், இப்போது அது நிலாவிற்கு பிரச்சனையாகி விட்டது. நிலாவின் முகம் சற்றே தெரிந்திருந்தது, நிலா சாப்பிட்டு அலுவலகத்திற்கு போலாமா என்றான், நிலா உடனே, சரிடா ஆனால் இப்போது நடந்த எதுவும் அலுவலகத்தில் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று வேண்டிக்கொண்டாள், இருந்தாலும் நிலாவிற்கு கொஞ்சம் பயம் வந்திருந்தது அவளின் திருமணம் பற்றி. ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு அலுவகம் வந்து விட்டார்கள், மதிய இடைவேளையில் பேசிக்கொள்ளலாம், என்று லதாவும் அவர்களை விட்டு விட்டாள், வேலை பளுவில் நிலா கொஞ்சம் எல்லாவற்றையும் மறந்து போயிருந்தாள், கவிக்கு அது கொஞ்சம் சந்தோஷத்தை கொடுத்து இருந்தது, மதிய இடைவெளி, எல்லோரும் உணவருந்த சென்று விட்டிருந்தனர், கவியும் வீட்டிற்கு செல்ல தயாராகி, நிலாவிடம் வந்தான், நிலா, நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டு வரட்டா, அண்ணி ஏதோ பண்ணிருக்காங்களாம், உனக்கும் தரேன்னு சொன்னாங்க, நான் போயிட்டு சீக்கரம் வந்திடறேன், என்றுவிட்டு கிளம்பிவிட்டான். நிலா சரி என்றாள். லதா, அவர்களை ரொம்ப விசித்திரமாக பார்த்தாள். கவி சென்றவுடன், நிலாவிடம் வந்தாள். ஏண்டீ ஒண்ணுமே நடக்காதது போல இருக்கீங்க அவன் உன்ன காதலிக்கலையா கேட்டாள், லதா. இல்லடீ நாம தான் தப்ப நெனச்சுட்டோம், இருந்தாலும் ஒரு safe க்கு அவன்ட இதல்லாம் சரி படாதுன்னு சொல்லிட்டேன் என்றாள். நிலாவை லதா நம்பியது போல தெரியவில்லை, அனால் இந்த பேச்சுக்கு இதோடு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது. அவள் சாப்பிட வில்லை, காத்திருந்தாள் கவிக்காக. கவியின் வீட்டில் அங்கே அவன் நிலை குலைந்து இருந்தான், உலகமே சூன்யம் ஆகிவிட்டது போல் தோன்றி இருந்தது, வீட்டில் அனைவரும் என்ன என்று கேட்டு குடைந்து விட்டார்கள். கவி நடந்ததை வீட்டில் சொன்னான், அவர்களுக்கும் கொஞ்சம் வேதனையாக தான் இருந்தது அனால் அதனை, வெளியில் காண்பித்துக்கொந்தால் எங்கே கவி இன்னும் வேதனை படுவானோ என்று அவர்கள், அவனை சாப்பிட வைத்து, நிலாவிற்கும் கொடுத்து அலுவலகத்திற்கு அனுப்பிவைத்தனர். கவியின் வீட்டில், நிலாவின் இந்த நிலைக்கு தாங்களே காரணமாகி விட்டோமோ என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்கள். எல்லோரும் ஒரே மனநிலையில் இருந்தார்கள், கவி நிலாவிற்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தான், சாப்பிடும் நிலையில் நிலா இல்லைதான் ஆனிலும் மற்றவர்களுக்காகவாது ஏதாவது சாப்பிட வேண்டுமே இல்லையென்றால் எல்லோருடைய கேள்விகளுக்கும் பதில் வேறு சொல்ல வேண்டுமே என்று உன்ன ஆரம்பித்தாள். லதாவும் அவர்களோடு சேர்ந்து கொண்டாள். இருவரும் உண்ண ஆரம்பித்தனர்.

Bạn đang đọc truyện trên: Truyen4U.Com