Chào các bạn! Truyen4U chính thức đã quay trở lại rồi đây!^^. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền Truyen4U.Com này nhé! Mãi yêu... ♥

28. Returned

அவர் மனதில் நினைத்தது கடவுள் ஏற்று கொண்டு விட்டான் போலும், அதே நேரத்தில் கடல் கொள்ளையர்கள் இருள் தேசத்தின் மண்ணை மிதித்து கொண்டிருந்தனர்.
.
.
.
"இளவரச இளவரசிகள்! நம் பயணம் இப்போது ஆரம்பிக்க போகிறது. உங்கள் பெற்றோர்களுக்கு உங்களின் வருகையை பற்றி முன்னரே அறிவித்து விட்டோம்.

மேலும் எங்கள் பயணம் ஒரு நாளுக்கு நீடிக்கும். உங்களின் தேவைகளை இயன்றவரை பூர்த்தி செய்ய பணியாட்கள் இங்கே அர்ப்பணிப்புடன் வேலை செய்கின்றனர். உங்களுக்கான அறைகளுக்கு நீங்கள் செல்லலாம். அங்கே உங்களின் luggage வைக்கப்பட்டிருக்கும்!" என்று announce பண்ணினார் gentleman royal Stephen.

நண்பர்கள் நால்வரும் கப்பலின் முன் பகுதியில் போடப்பட்டிருந்த கதிரைகளில் அமர்ந்து நடந்தவற்றை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

Princess Tanya தனது iPad ஐ எடுத்து, அதில் செங்கோலையும் கிரீடத்தையும் கண்டுபிடித்து விட்டார்களா என்று அலசி ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

"Guys! இன்னும் எந்த ஒரு தகவலும் இல்லை!" என்று princess Tanya கூற, "நாம தப்பு பண்ணிட்டோம் என்று எனக்கு தோணுது!" என்றாள் princess Helena.

"இதை நம்மலாலயே தீர்க்க முடிந்தால் எவ்வளவு நல்லது!" என்று prince Alex பெருமூச்சு விட,

"இராணுவத்தாலேயே இன்னும் அவங்கள கண்டுபிடிக்க முடியல்ல. அப்படி இருக்க நம்ம போல குட்டி பசங்களுக்கு எப்படி அந்த சாதான்களை பிடிக்க முடியும்?" என்று pineapple pie ஐ வாயில் அமுக்கியவாறு கூறினான் prince fred.

"என்ன? நீங்க கண்டுபிடிக்க போறீங்களா? ஆமா நீங்க எல்லாம் யாரு? Super heroes என்று நினைப்பா? பண்ணது எல்லாம் பண்ணிட்டு இப்போ பிரச்சினையை தீர்க்க போறாங்களாம். முதல்ல உங்க முகங்களை போய் கண்ணாடியில பாருங்க!" என்று prince Ryan கிண்டலடித்து கொண்டே எதிரே கடலிலுள்ள அலைகளின் அசைவுகளை ஆராய்ந்து கொண்டிருந்த princess Roquelle ன் அருகில் சென்றான்.

"ஆமா அவன் சொல்வதும் சரி தான்! நாம என்ன super hero heroine ஆ? அவ்வளவு பலம் வாய்ந்த ஒரு மன்னனை தோற்கடிக்கும் அளவுக்கு? அதுவும் இல்லாமல் கிரீடமும் செங்கோலும் கிடைத்த ஒரு மன்னனை வீழ்த்துவதற்கான சக்தி கடவுளை தவிர வேறு யாருக்கும் இல்லை! இப்படி இருக்கும் போது நாம எப்படி அதை தடுக்குறது?" என்று princess Tanya அவளின் கருத்தை முன்வைக்க,

"ஆமா அவள் சொல்றதும் சரி தான். இராணுவத்தினராவது அந்த செங்கோலும் கிரீடமும் இருள் அரசனின் கைக்கு கிடைக்க முன் அதை கைப்பற்றி கொள்ள வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்!" என்றான் prince Alex.
.
.
.
Princess Roquelle ன் அருகில் வந்த prince Ryan ஐ நோக்கி "நீ ஏன் உன் island கு போகாமல் prince Volker உடைய island கு போகிறாய்?" என்று வினவ,

ஏனோ ஒரு தடுமாற்றத்தை முதலில் காட்டியவன் இறுதியாக, "என் அம்மா அப்பா ஏதோ விஷயமாக அருகிலிருக்கும் island கு போய்ட்டாங்க. வருவதற்கு இன்னும் இரண்டு மூன்று நாள் எடுக்கும். And நாங்க திடீரென்று போகிறதால் அவங்களுக்கு வந்து சேர முடியவில்லையாம். அதுதான் அவனுடைய island ல போய் இரண்டு நாட்கள் தங்கி பின் என் island கு செல்ல முடிவெடுத்தேன்!" என்று விட்டு அங்கிருந்து நகன்றான் prince Ryan.
.
.
.
யாருக்காகவும் நிற்காத அந்த கடிகார முட்கள் தனது வேலையை முறையே செய்ய, கிடைத்த அருமையான நண்பர்களையும் பிரிய முடியாமல் வேதனையுடன் மூவருடனும் விடாது பேசிய வண்ணம் இருந்தாள் Princess Helena.

மணித்தியாலங்கள் நிமிடங்கள் போல கடக்க, princess Helena ன் island நெருங்கியது. அவளின் luggage அனைத்தும் முன்னால் கொண்டு வந்து வைக்கப்பட்டது.

நண்பர்களுடன் தினமும் தொலைபேசியில் பேசுவதாகவும் பெற்றோரின் வேலைபழுவுகள் குறையும் போது அவர்களுடைய தீவுகளுக்கு வருவதாகவும் promise பண்ணி விட்டு தன் தாய் நாட்டை பார்ப்பதற்காக வெளியே வந்து நின்றாள்.

அவள் வெளியே வந்து நிற்கும் போது, ஒருவன் அவளை நோக்கி விரைந்து வந்து அவளின் தோற் பையில் ஏதோ கடதாசி துண்டொன்றை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தான்.

அவளோ தன்னை யாரோ நெருங்கியதை உணர்ந்து பின்னால் திரும்பி பார்க்க, அங்கு prince Alex, prince fred மற்றும் princess Tanya அவளை நோக்கி வருவதை மாத்திரமே கண்டாள்.

அவளும் நடந்ததை யோசிக்கும் மனநிலையில் இருக்காததால் அப்படியே அதனை விட்டு விட்டாள்.

சில நிமிடங்களில் அவளின் தீவை அடைய, ஒருமுறை மூவரையும் அணைத்து கொண்டு விட்டு கண்ணீருடன் தாய் நாட்டில் ஏமாற்றத்துடனும் குற்ற உணர்வுடனும் அடி எடுத்து வைத்தாள் princess Helena.

அவளை துறைமுகத்திலிருந்து கூட்டி செல்ல prince Tommy வந்திருக்க, நண்பர்கள் மூவரினதும் பிரியா விடை பெற்று அவளும் அரண்மனைக்கு சென்றாள்.

அங்கே அவளது பெற்றோர் அவளின் வருகைக்காக காத்திருக்க, அவர்களுடன் இணைந்து prince Tommy ன் அம்மாவும் காத்திருந்தார்.

Princess Helena வந்த வேகத்தில் தனது பெற்றோரை கண்டு அவர்களை அணைத்து அழ ஆரம்பித்தாள்.

அவளின் அழுகைக்கான அர்த்தம் புரிந்து கொள்ள முடியாமல் தவித்த queen உம் king உம் அவளின் அழுகையை ஒருவாறு சமாளித்து refresh ஆகி விட்டு வருமாறு அவளின் அறைக்கு கூட்டி சென்றனர்.

அவளும் குளித்து ஆடைகளையும் மாற்றி விட்டு தனது நண்பர்களுக்கு ஒரு message ஐயும் அனுப்பி வைத்தாள்.

தனது அறைக்கு கொண்டு வந்து வைக்கப்பட்ட தனது luggage ஐ திறந்து பார்க்க, அதில் அவள் அங்கே அணிந்த ஆடைகளில் சிலவும் அங்கு தரப்பட்ட iPad உம் இருந்தது.

அவற்றை வெளியே எடுத்தவளுக்கு luggage ன் அடியில் இருந்த photo frame கண்ணுக்குபட்டது.

அதில் அவர்கள் நால்வரும் முதலாவதாக எடுக்கப்பட்ட group photo! அதனை எடுத்து தனது கட்டிலுக்கு அருகில் இருந்த மேசையில் வைக்க, ஏற்கனவே மேசை மீது வைக்கப்பட்டிருந்த அவளின் தோற்பை அவள் கை எடுத்த வேகத்தில் கீழே விழுந்தது.

"இது வேற!" என்று கீழே விழுந்ததை எரிச்சலுடன் எடுக்க முற்பட்ட princess Helena, அதில் ஏதோ ஒரு கடதாசி துண்டு ஒன்று இருப்பதை கண்டு அதனை கையில் எடுத்தாள்.

அதனை எடுக்க, அவளுக்கு கப்பலில் யாரோ அவளின் அருகில் வந்தது ஞாபகம் வரவே உடனே அதனை திறந்து பார்த்தாள்.

அதில் "princess Helena! Sorry! நான் இதை வேண்டும் என்று செய்யவில்லை. கட்டாயபடுத்தலில் தான் செய்தேன். நீ உன் pink tiara (crown) ஐ போட்டு கொண்டு எங்கேயும் போகாதே!" என்று எழுதப்பட்டிருக்க, அதன் கீழே PG என்று கையொப்பமும் இடப்பட்டிருந்து.

அந்த கடதாசியில் எழுத்தப்பட்டிருந்த இறுதி எழுத்துக்களும் அந்த கையொப்பமும் கிறுக்கல் எழுத்தில் எழுதப்பட்டிருந்ததை வைத்து எழுதியவர் ஏதோ அவசரத்தில் எழுதியதை ஊகித்து கொண்டாள்.

அனைவரும் அரண்மனைக்கு போய் சேர்ந்ததும் Conference call எடுக்குமாறு அவள் தனது நண்பர்களுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி விட்டு, இந்த கடதாசி யார் தனது பையில் போட்டிருக்க வேண்டும் என்று யோசித்து கொண்டிருந்தாள்.

உடனே அவளுக்கு ஒரு யோசனை தோன்ற,அவள் ipad ஐ எடுத்து ஏதோ type பண்ணி கொண்டிருந்தாள்.

இதற்கிடையில் வந்த room servant அவளை king அவசரமாக அழைப்பதாக கூற, அவளும் ipad ஐ தனது கட்டிலில் வைத்து விட்டு தனது தந்தையை காண சென்றாள்.
.
.
.
"Lady royal Elena! We are very sorry. உங்களுக்கு அதிர்ச்சியில் இப்படி மயக்கம் வந்ததாக doctor கூறினாங்க . I know the reason..." என்று கவலை தோய்ந்த முகத்தில் lady royal Elena ன் முகத்தை பார்க்க முடியாமல் கண்களை வேறு திசைகளில் உருட்டிவாறு கூறினார் lady royal Alisa.

"இது எல்லாம் உன் பிழை தான். என் sister கு மட்டும் ஏதாவது ஆகி இருந்தால் உன் தோலை உரித்து கழுகுக்கு போட்டு இருப்பேன். நீங்க இரண்டு பேரும் என் sister உடைய feelings ல விளையாடி விட்டீங்க! ஏன் அப்போதே இரண்டு பேருக்கும் திருமணமாகியதாக சொல்லவில்லை? என் sister ஐ இப்படி hospital லில் படுக்க விட்டதற்காக உங்க இரண்டு பேரையும் royal high school லில் இருந்து விலக்கி விடுகிறேன்!" என்று ஆக்ரோஷமாக lady high royal கத்த,

"Just stop it! அவங்க இருவரும் பிழையில்லை. நான் தான் gentleman royal Stephen ஐ தவறுதலாக புரிந்து கொண்டேன். நான் என் அக்கா royal high school ல் இருப்பதால் அந்த உரிமைகளை வைத்து இங்கு கற்பிக்க இடம் கிடைத்தது but அவங்க இருவரும் பல தியாகங்களை செய்ததால் தான் இங்கு இடம் கிடைத்தது. எங்களை பற்றி தெரிந்து கொண்டதன் பிறகு தான் அவங்க திருமணமாகியதை எங்க கிட்ட சொல்லவில்லை. அப்படி சொன்னால் நாம இந்த royal high school லில் இருந்து வெளியேற்றி விடுவோம் என்ற பயத்தில். So please don't scold to them and don't take any actions against them sister!" என்று lady royal Elena கெஞ்சி கூற,

கோப கொந்தளிப்பிலிலேயே அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றார் lady high royal.

Lady royal Elena தங்களது நிலைமையை புரிந்து கொண்டதற்காக lady royal Alisa நன்றி தெரிவிக்க, அவரும் சிரிப்புடன் lady royal Alisa கொண்டு வந்த பூங்கொத்தை பெற்று கொண்டார்.

இருவரும் சேர்ந்து சில நிமிட கதைகளில் மூழ்கி போய் இருக்க, இடையில் lady royal Alisa ன் தொலைபேசி சிணுங்கியது.

அவரும் அறையை விட்டு வெளியே வந்து தொலைபேசியை பார்க்க, அதன் திரையில் gentleman royal Stephen அழைப்பதாக காட்டியது.

Lady royal Alisa வெளியே சென்றதும் தனது தொலைபேசியை எடுத்து Alisa ன் அம்மாவுக்கு அழைப்பை ஏற்படுத்தி நடந்தவற்றை கூறியதற்கு நன்றி தெரிவித்தார் lady royal Elena.

நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமலும் lady royal Elena தங்கள் பக்கம் பேசியதையும் வியப்புடன் gentleman royal Stephen னிடம் கூறிய lady royal Alisa "நீங்க இன்று இங்கு வரீங்க தானே!" என்று வினவ,

அவரோ, "sorry darling! இன்னும் இரண்டு நாட்களில் வருகிறேன். சிறிய வேலையொன்று இடைநடுவே வந்து விட்டது. Ok நான் பிறகு பேசுகிறேன். Bye!" என்று தொலைபேசியை துண்டித்த gentleman royal Stephen "The dark wolf island! I'm coming!" என்றவாறு மனதில் நினைத்த வண்ணம் சிறிய கப்பலிலொன்றில் யாருக்கும் தெரியாமல் இருள் தேசத்தை நோக்கி பயணமானார்.
.
.
.
அரசனுக்கு முழு மரியாதையுடன் கொள்ளையர்கள் கிரீடத்தையும் செங்கோலையும் கொண்டு வந்து ஒப்படைக்க, அளவில்லா சந்தோசத்தையும் அரைபுன்னகையுடன் கொண்டாடும் இருள் தேச அரசன் அதனை ஏற்று கொண்டான்.

இனிமேலும் யாருக்கும் அடிமையாகாமல் தன் இஷ்டப்படி அனைத்து தீவுகளையும் அடிமையாக்கி தான் மாத்திரம் அரசனாகும் அந்த நாளை கண் முன்னே கொண்டு வந்தான்.

சிறிது நேரத்தில் அரச சபைக்கு அதிகாரிகள் அனைவரும் வந்து சேர்ந்தனர்.

அடுத்த திட்டத்தை நிறைவேற்றுமாறு சில அமைச்சர்களை அழைத்து கூற, மற்ற அமைச்சர்களுக்கு முடிசூட்டு விழாவுக்கான ஆயத்தங்களை ஆரம்பிக்கும் படி உத்தரவிட்டார் அந்த இருள் அரசன்.

அப்போதே அவனும் இருள் தேசத்தின் மண்ணை மிதித்தான் வெற்றி புன்னகையுடன்.....


உண்மையில் யார் இந்த gentleman royal Stephen?

Princess Helena கு யார் அந்த கடதாசியை அவளின் தோற்பையில் போட்டது?

யார் அவன்? அவனுக்கும் இருள் அரசனுக்கும் உள்ள தொடர்பு என்ன?

Thanks for the votes and comments.
Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen4U.Com